/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேரு ரிதம் சமூக வானொலி நிலையம் அமர்க்கள துவக்கம்
/
நேரு ரிதம் சமூக வானொலி நிலையம் அமர்க்கள துவக்கம்
நேரு ரிதம் சமூக வானொலி நிலையம் அமர்க்கள துவக்கம்
நேரு ரிதம் சமூக வானொலி நிலையம் அமர்க்கள துவக்கம்
ADDED : டிச 25, 2025 05:15 AM

கோவை: கோவை நேரு கல்வி குழுமம் சார்பில், அதன் சமூக வானொலி நிலையமான நேரு ரிதம் 88.4 திருமலையம்பாளையத்தில் உள்ள, நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் பிரமாண்டமாக துவக்கப்பட்டது. நேரு குழும நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணதாஸ் தலைமை வகித்தார்.
கல்வியாளர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தொடக்கி வைத்தார். சமூகம் மற்றும் உள்ளூர் கலாசாரத்தை மேம்படுத்துவதிலும், அர்த்தமுள்ள தகவல் தொடர்புக்கான தளத்தை வழங்குவதிலும் சமூக வானொலியின் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தினார். நேரு ரிதம் 88.4 சமூக வானொலி மாணவர்களின் திறமையை வளர்ப்பதற்கும், படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கும், ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று, நேரு கல்வி குழும நிறுவனங்களின் செயலாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.