/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாலிபால் அரங்கம் வேலை துவக்கம்
/
வாலிபால் அரங்கம் வேலை துவக்கம்
ADDED : டிச 25, 2025 05:15 AM

கோவை: நேரு ஸ்டேடியம் எதிரே ரூ.1.95 கோடியில் வாலிபால் போட்டிக்கு, முதல்கட்டமாக உள்விளையாட்டு அரங்கு அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(எஸ்.டி.ஏ.டி.) மாவட்டம்தோறும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. கோவை இளைஞர்கள் விளையாட்டில் சாதித்தாலும், சென்னையை போன்று கட்டமைப்பு வசதிகள் இல்லாதது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது.
தடகளம், கூடைப்பந்து, ஸ்கேட்டிங், கால் பந்து போன்ற விளையாட்டுகளுக்கு இங்கு கட்டமைப்பு வசதிகள் உள்ளன. நீச்சல், துப்பாக்கி சுடுதல், வாலிபால், ஜிம்னாஸ்டிக், பேட்மின்டன் போன்றவற்றுக்கு கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதையடுத்து, நேரு ஸ்டேடியம் எதிரே வாலிபால், கபடி, பேட்மின்டன் வீரர்கள் பயிற்சி பெற 5 கோடி ரூபாயில் 1,470 சதுர மீட்டரில் உள்விளையாட்டு அரங்கு அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. முதல் கட்டமாக, ரூ.1.95 கோடியில் வாலிபால் அரங்கம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளது.

