/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேரு விளையாட்டு அரங்கில் விரைவில் ‛ஏ.சி. 'ஜிம்'
/
நேரு விளையாட்டு அரங்கில் விரைவில் ‛ஏ.சி. 'ஜிம்'
ADDED : நவ 06, 2025 11:24 PM

கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கில், குளிர்சாதன வசதியுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம், இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.
மாவட்ட விளையாட்டு வளாகங்களில், குளிர்சாதன வசதியுடன் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கவும், உடற்பயிற்சிக் கூடம் இருக்கும் இடங்களில் நவீனப்படுத்தவும், அரசு சார்பில், 9.78 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் இப்பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன.
ஒரு பகுதியாக, கோவை நேரு விளையாட்டு அரங்கில் உள்ள வளாகத்தில், 2,000 சதுரடியில், குளிர்சாதன வசதியுடன் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. இம்மாத இறுதிக்குள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, நேரு விளையாட்டு அரங்கில் உள்ள விளையாட்டு விடுதி மாணவர்கள் 60 பேருக்கு முன்னுரிமை தரப்பட உள்ளது. பின், பொதுமக்களும் இந்த உடற்பயிற்சிக் கூடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்றுநர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.பொதுமக்கள் பயிற்சி பெறுவதற்கான கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி தெரிவித்தார்.

