/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில ‛ப்ளோர் பால் போட்டி: இரு நாட்கள் 'களை' கட்டும்
/
மாநில ‛ப்ளோர் பால் போட்டி: இரு நாட்கள் 'களை' கட்டும்
மாநில ‛ப்ளோர் பால் போட்டி: இரு நாட்கள் 'களை' கட்டும்
மாநில ‛ப்ளோர் பால் போட்டி: இரு நாட்கள் 'களை' கட்டும்
ADDED : நவ 06, 2025 11:24 PM
கோவை: கோவை மாவட்ட ப்ளோர் பால் அசோசியேஷன் மற்றும் ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி இணைந்து, 19வது மாநில அளவிலான ப்ளோர் பால் போட்டி, வரும் 8, 9ம் தேதிகளில், பச்சாபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில் நடக்கிறது.
இதில், 12 வயது மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பிரிவிலும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓபன் கேட்டகிரி பிரிவிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து அணிகள் பங்கேற்க உள்ளன. வெற்றி பெறுவோருக்கு கோப்பை, பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. சிறப்பு விருந்தினராக, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரியின் முதல்வர் சிவகுமார் பங்கேற்கிறார்.கவுரவ விருந்தினர்களாக, முன்னாள் மாணவர் ஹசிபா காசம்வாலா, பளுதுாக்கும் வீராங்கனை நித்யா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.