ADDED : ஆக 27, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
கோவை, ஆக.28- நேரு ஸ்டேடியம் பகுதியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
விளையாட்டு போட்டிகள் நடக்கும் போது கூடுதலாக வாகனங்கள் வருகின்றன. சுற்றியுள்ள ரோட்டில் கடைகளின் ஆக்கிரமிப்பு இருப்பதாலும், ரோடு வரை ஆக்கிரமித்து டேபிள்கள் போடுவதும், கார்களை நிறுத்துவதுவதாலும் மோசமான நெரிசலை பார்க்க முடிகிறது.
வாகனங்களே செல்ல முடியாத நிலையில் பாதசாரிகள் நடக்க பாதையே இல்லை. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஸ்டேடியம் அதிகாரிகள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
”ஆக்கிரமிப்பு அகற்றமா? கோவையிலா? அப்படி எதுவும் அசம்பாவிதம் நடக்காது” என கடைக்காரர்கள் நம்பிக்கையுடன் புன்னகை செய்கிறார்கள்.
