/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேரு ஸ்டேடிய கடைகள் வாடகை பாக்கி ரூ.2.84 கோடி! அறிவிப்பு வழங்கி வசூலிக்க உத்தரவு
/
நேரு ஸ்டேடிய கடைகள் வாடகை பாக்கி ரூ.2.84 கோடி! அறிவிப்பு வழங்கி வசூலிக்க உத்தரவு
நேரு ஸ்டேடிய கடைகள் வாடகை பாக்கி ரூ.2.84 கோடி! அறிவிப்பு வழங்கி வசூலிக்க உத்தரவு
நேரு ஸ்டேடிய கடைகள் வாடகை பாக்கி ரூ.2.84 கோடி! அறிவிப்பு வழங்கி வசூலிக்க உத்தரவு
ADDED : டிச 12, 2025 05:05 AM

கோவை, கோவை நேரு ஸ்டேடிய வணிக வளாக கடைகள் ரூ.2.84 கோடி வாடகை பாக்கி வைத்த நிலையில் வரும் காலங்களில் மூன்று மாதங்களுக்கு மேல் வாடகை பாக்கி வைத்தால் அறிவிப்பு வெளியிட எஸ்.டி.ஏ.டி.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை நேரு ஸ்டேடிய வணிக வளாகத்தில், 89 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய(எஸ்.டி.ஏ.டி.,) ஜிம், தங்கும் விடுதி உள்ளிட்டவற்றுக்கு, 10 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள, 79 கடைகளில் தனியார், அரசுத்துறைகளின் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவையை சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன், நேரு ஸ்டேடிய வணிக வளாக கடைகளின் வாடகை பாக்கி குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம்(ஆர்.டி.ஐ.,) வாயிலாக எஸ்.டி.ஏ.டி.,யிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கான பதிலறிக்கையில் அதிகபட்சமாக(கடை எண்: 42-47) மருதம் கே-ஆப்டெக்ஸ் ஒரு கோடியே, 70 லட்சத்து, 35 ஆயிரத்து, 157 ரூபாய், அரசு அருங்காட்சியகம்(கடை எண்:21-23) ரூ.71 லட்சத்து, 808, தனியார் ஒருவர் ரூ.43 லட்சத்து, 32 ஆயிரத்து, 495 என, ரூ.2 கோடியே, 84 லட்சத்து, 68 ஆயிரத்து, 460 பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், எஸ்.டி.ஏ.டி.,யால் போதுமான தகவல் வழங்கப்படவில்லை என, தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆணையர் பிரியகுமார் முன்னிலையில் விசாரணை நடந்தது.
அப்போது, 'பொது ஏலத்தில் பங்கெடுத்து, அதன் வாயிலாக அரசுக்கு சொந்தமான இடத்தினை வாடகைக்கு எடுத்தவர்கள் அனைவருமே பொது மக்கள் பார்வைக்கு தெரியப்படுத்தப்பட வேண்டியவர்கள்.
பாக்கி தொகை செலுத்தாமல் இருப்பவர்களுடைய தகவல்களை விளம்பர பலகையில் வைத்திருக்க வேண்டும்.
வரும் காலங்களில் மூன்று மாதங்களுக்கு மேல் வாடகை பாக்கி இருந்தால் வாடகைதாரர்களுக்கு அறிவிப்பு வாயிலாக தெரியப்படுத்த வேண்டும்.
வாடகை அதிகரிக்கப்பட்டதற்கான அறிவிப்பு விளம்பர பலகையையும் பொது அலுவலக வளாகத்தில் வைக்க வேண்டும்' என, ஆணையம் பரிந்துரைத்தது.
எஸ்.டி.ஏ.டி., அதிகாரிகள் கூறுகையில்,'மாநிலம் முழுவதும் இதேபோன்று வாடகை தொகை செலுத்தாமல் இருப்பவர்களிடம் நிலுவையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மூன்று மாதங்களுக்கு மேல் வாடகை செலுத்தாதவர்களிடம் அறிவிப்பு வழங்கி வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

