/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப்பன்றிகளின் தொல்லை தாங்க முடியல... மலையோர விவசாயிகள் அதிருப்தி
/
காட்டுப்பன்றிகளின் தொல்லை தாங்க முடியல... மலையோர விவசாயிகள் அதிருப்தி
காட்டுப்பன்றிகளின் தொல்லை தாங்க முடியல... மலையோர விவசாயிகள் அதிருப்தி
காட்டுப்பன்றிகளின் தொல்லை தாங்க முடியல... மலையோர விவசாயிகள் அதிருப்தி
ADDED : டிச 12, 2025 05:07 AM

பெ.நா.பாளையம்: சின்னத்தடாகம் வட்டாரத்தில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வேளாண் பயிர்கள் சேதம் அடைகின்றன. பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டுப்பன்றிகள் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால், அதை வேட்டையாடுவது வனத்துறை சட்டப்படி குற்றம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவை வேளாண் நிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தினாலும், அதை விரட்டவோ அல்லது வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.
இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, தமிழக அரசு, கடந்த ஜன.,யில் சட்டசபை கூட்டத்தில் காட்டுப் பன்றிகளை ஒழிக்க சிறப்பு திட்டத்தை அறிவித்தது. இதன்படி, காட்டு பன்றிகள், வன எல்லையில் இருந்து, 3 கி.மீ.,க்குள் இருந்தால், அதை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும். 3 கி.மீ., அப்பால் பொதுமக்கள் நடமாடும் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டுப்பன்றிகள் தென்பட்டால், அதை வட்டார குழுக்கள் வாயிலாக மாவட்ட குழுவுக்கு தெரிவித்து, காட்டு பன்றிகளை வேட்டையாட நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை காட்டுப்பன்றிகள் எதுவும் வேட்டையாடப்படவில்லை.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,' தமிழக அரசின் அறிவிப்பு இதுவரை வெறும் அறிவிப்போடு மட்டுமே நிற்கிறது. செயல்பாட்டுக்கு வரவில்லை. அரசு ஆணையின் வழிகாட்டுதல்படி வனவர், வி.ஏ.ஓ., ஊராட்சி மக்கள் பிரதிநிதி உள்ளிட்டவரை கொண்ட முதல் கட்ட கிராம குழு அமைக்கப்படும். அடுத்தகட்டமாக வனவிலங்கு ஆர்வலர் உள்ளிட்டவரை கொண்ட வட்டார குழுக்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். வட்டார குழுக்களின் அறிக்கையை கலெக்டர், புலிகள் காப்பக துணை இயக்குனர், வேளாண் இயக்குனர் இடம் பெற்று உள்ள மாவட்ட குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் மாவட்ட குழு தான் காட்டு பன்றிகளை கொல்வதற்கான அனுமதியை வழங்கும்.
இதுவரை அதுபோன்ற எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. இதனால் காட்டு பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதம் தொடர்ந்து நடக்கிறது. ஆனால், கேரளாவில், பாலக்காடு மாவட்டத்தில் காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்லும் நடைமுறை இருந்து வருகிறது. அதைப் பின்பற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இது குறித்து, வனத்துறையினர் கூறுகையில்,'காட்டுப்பன்றிகள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால், அதை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றனர்.

