/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேரு வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
/
நேரு வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
ADDED : நவ 24, 2024 11:44 PM
கோவை; ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா, பள்ளி விளையாட்டு திடலில் நடந்தது.
பள்ளித் தலைவர் மகாவீர் போத்ரா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்கள் கோவை மாவட்ட சர்வதேச ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் குரியச்சன் மற்றும் கவுதம் சந்த், ஷ்ரேனிக், உத்யன் சந்த் நஹர், பள்ளிக் குழுத் தலைவர்கள் கோபால் பூராடியா, பாப்னா மற்றும் பள்ளியின் முன்னாள் நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
பள்ளி முதல்வர் பங்கஜ், ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டு, சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, மாணவர்கள் பல்வேறு நிகழ்வுகளை அரங்கேற்றினர். ஆண்டு விழாவில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.