தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நேந்திரன் கொள்முதல் விலை உயர்வு

நேந்திரன் கொள்முதல் விலை உயர்வு

நேந்திரன் கொள்முதல் விலை உயர்வு


UPDATED : அக் 21, 2026 07:49 PM

ADDED : அக் 21, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 07:49 PM ADDED : அக் 21, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்: நேந்திரன், ஒரு கிலோ, 53 ரூபாய்க்கு, கொள்முதல் செய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அன்னூர் வட்டாரத்தில், 1,500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நேந்திரன், கதலி, ரோபஸ்டோ ரக வாழை பயிரிடப்படுகிறது. இதில் பெரும்பாலும் குவின்டால் ரகம் நல்ல விளைச்சல் தருகிறது. விளைவிக்கப்படும் வாழைகளில், 90 சதவீதம் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. பத்து சதவீதம் மட்டும் உள்ளூருக்கும், மும்பைக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக, நேந்திரன் வாழை தார் நல்ல விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வாழை விவசாயிகள் கூறுகையில், 'தற்போது, ஒரு கிலோ நேந்திரன் தோட்டத்தில், 53 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். கடந்த வாரத்தை விட ஒரு கிலோவுக்கு, ஏழு ரூபாய் குறைந்துள்ளது. ஆனாலும், 53 ரூபாய் என்பது நல்ல விலை. இது மகிழ்ச்சி தருகிறது,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us