தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தொடர்கிறது கனமழை வீழ்ந்தது காய்கறி விலை

தொடர்கிறது கனமழை வீழ்ந்தது காய்கறி விலை

தொடர்கிறது கனமழை வீழ்ந்தது காய்கறி விலை


UPDATED : அக் 21, 2026 07:49 PM

ADDED : அக் 21, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 07:49 PM ADDED : அக் 21, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது. விவசாயிகள், விளை பொருட்களை, தொண்டாமுத்துார், பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.

ஒரு வாரத்திற்கு மேலாக இப்பகுதியில் கனமழை உள்ளது. இதனால் மார்க்கெட்டுகளுக்கு வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளது; காய்கறி விலையும் வீழ்ந்துள்ளது.

பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று 15 கிலோ எடையுள்ள ஒரு டிப்பர் தக்காளி, ரூ.450, ஒரு கிலோ பயறு, ரூ.40, கத்தரி, ரூ.5, வெண்டை, ரூ.20, மிளகாய், ரூ.30, முட்டைக்கோஸ், ரூ.10, காலிபிளவர், ரூ.20 விற்பனையானது.

தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ‘தொடரும் மழையால், சாலையோர, சந்தை வியாபாரிகளால் கடை அமைக்க முடியவில்லை. அவர்கள் காய்கறி வாங்க வராததால் விற்பனை குறைந்துள்ளது. வெளியூர் காய்கறி வரத்து அதிகரித்துள்ளதும் விலை குறைய காரணம்’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us