தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இயற்கை பாதுகாப்பு தரும் 'நெட் ஜீரோ' கட்டமைப்பு

 இயற்கை பாதுகாப்பு தரும் 'நெட் ஜீரோ' கட்டமைப்பு

 இயற்கை பாதுகாப்பு தரும் 'நெட் ஜீரோ' கட்டமைப்பு


ADDED : ஜன 31, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

க ட்டுமான துறையில் இயற்கை வளங்களின் பயன்பாடு மற்றும் ஆற்றல் நுகர்வு சுற்றுச்சூழலுக்கு பெரிய சவாலாக மாறி வருகிறது. இந்நிலையில் நிலைத்த கட்டுமானம் மற்றும் 'நெட் ஜீரோ' கட்டடங்கள் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது.

கட்டடம் நிலைத்திருக்க வடிவமைப்பு, கட்டுமான முறை, பயன்படுத்தும் பொருட்கள் தரமாக இருப்பது அவசியம். அதன் முழு ஆயுள் காலத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தையும் சேர்த்து பார்த்து திட்டமிட வேண்டும்.

அந்த வகையில், ஜன்னல்கள் மற்றும் அவற்றின் சட்டங்கள் முக்கிய கூறுகளாக விளங்குகின்றன. ஜன்னல் சட்டத்திற்கு மரம் மற்றும் 'யுபிவிசி' ஆகிய இருவகை பொருட்கள் பயன்படுத்துகின்றனர்.

மரம் இயற்கையாக கிடைப்பது. நிலையான கட்டடம் என்ற கோணத்தில் பார்க்கும்போது, மரம் பயன்படுத்துவதன் சவால்களையும் கவனிக்க வேண்டும். கட்டுமான தேவைக்காக மரங்களை வெட்டுவது வனத்தை குறைக்கிறது.

ஈரப்பதம் உள்ள பகுதிகளில் மர ஜன்னல்கள் வளைந்து விடும் அல்லது வெள்ளை எறும்புகளால் சேதமடையும். இதனால் அவற்றை மாற்ற வேண்டி வரும். அதனால் வளங்களின் மீள்பயன்பாடு குறைகிறது.

'யுபிவிசி' ஜன்னல்கள் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. பெயின்ட் அல்லது பாலிஷ் பராமரிப்பு தேவையில்லை என்பதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு குறைவு. இவை சிறந்த வெப்ப மற்றும் ஒலி தடுப்பு தன்மையை வழங்கும். இதனால் 'ஏசி' பயன்பாடு குறைவதால் மின் நுகர்வு குறைகிறது. கார்பன் உமிழ்வு குறைந்து 'நெட் ஜீரோ' கட்டடம் என்ற இலக்கை அடைய உதவுகிறது.

இந்த ஜன்னல்கள் பசுமை கட்டட மதிப்பீடுகளில் சாதகமான புள்ளிகளை வழங்குகின்றன. நீண்ட காலம் மாற்றமின்றி பயன்படும் தன்மை, பராமரிப்பு தேவையின்மை ஆகியன நிலைத்த கட்டடக் கோட்பாடுகளுடன் நேரடியாக இணைகின்றன என்கிறார் 'காட்சியா' உறுப்பினர் அன்னாரீனா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us