sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநில ஹேண்ட் பால்; நேதாஜி அணி வெற்றி

/

மாநில ஹேண்ட் பால்; நேதாஜி அணி வெற்றி

மாநில ஹேண்ட் பால்; நேதாஜி அணி வெற்றி

மாநில ஹேண்ட் பால்; நேதாஜி அணி வெற்றி


ADDED : ஆக 25, 2025 09:51 PM

Google News

ADDED : ஆக 25, 2025 09:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; சேலம் வைஸ்யா கல்லுாரியில் மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டி நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

முதல் போட்டியில், கோவை கற்பகம் பல்கலை அணி, சேலம் ஜெயராணி அணியை எதிர்கொண்டது; 22-9 என்ற புள்ளிக்கணக்கில் கற்பகம் பல்கலை வெற்றி பெற்றது. காலிறுதி போட்டியில் கற்பகம் பல்கலை அணி, ஓமலுார் ஏ.வி.எஸ்., அணியை எதிர்கொண்டது; 24-16 என்ற புள்ளிக்கணக்கில் கற்பகம் பல்கலை வெற்றி பெற்றது.

அரையிறுதியில் கற்பகம் பல்கலை அணி, சேலம் எஸ்.டி.ஏ.டி., அணியை எதிர்கொண்டது; இதில், 30-12 என்ற புள்ளிக்கணக்கில் கற்பகம் பல்கலை வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில், கற்பகம் பல்கலை அணி, நேதாஜி கிளப் அணியை எதிர்கொண்டது.

26-29 என்ற புள்ளிக்கணக்கில், நேதாஜி அணி வெற்றி பெற்றது. கோவை கற்பகம் பல்கலை அணி இரண்டாம் பரிசு பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களை, கற்பகம் பல்கலை நிர்வாகத்தினர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us