தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரேஷன் கடைகளில் 'நெட் ஒர்க்' பிரச்னை; ஆன்லைனில் பணம் செலுத்த முடியல

ரேஷன் கடைகளில் 'நெட் ஒர்க்' பிரச்னை; ஆன்லைனில் பணம் செலுத்த முடியல

ரேஷன் கடைகளில் 'நெட் ஒர்க்' பிரச்னை; ஆன்லைனில் பணம் செலுத்த முடியல


ADDED : செப் 11, 2025 09:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2025 09:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை; வால்பாறையில், 'நெட் ஒர்க்' பிரச்னையால் ரேஷன் கடைகளில் ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், பெட்டிக்கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை, ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தும் வசதியை பயன்படுத்துகின்றனர். இதனால் மக்கள் மொபைல்போன் வாயிலாக பணம் செலுத்தும் வசதியை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், வால்பாறை நகரில் உள்ள ரேஷன் கடைகளில், கடந்த, 2023ம் ஆண்டு முதல் பொதுமக்கள்பணம் செலுத்த வசதியாக 'பேடிஎம்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் மக்கள் மொபைல்போன் வாயிலாக பணத்தை எளிதில் செலுத்துகின்றனர். ஆனால், வால்பாறை நகரை தவிர எஸ்டேட் பகுதி ரேஷன் கடைகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை.

குறிப்பாக, சோலையாறுடேம், சின்கோனா, முடீஸ், ரொட்டிக்கடை உள்ளிட்ட பகுதியில் செயல்படும் ரேஷன் கடைகளில் 'நெட் ஒர்க்' பிரச்னையால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிவில்சப்ளை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறை தாலுக்காவில் மொத்தம், 15,250 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுளுக்கு, 42 ரேஷன் கடைகள் வாயிலாக,மாதம் தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் மக்கள், ஆன்லைன் வாயிலாக எளிதில் பணம் செலுத்தும் வகையில் 'பேடிஎம்' வழங்கப்பட்டுள்ளது.

வால்பாறை நகரில் உள்ள கடைகளை தவிர மீதமுள்ள பகுதியில் செயல்படும் கடைகளில் 'நெட் ஒர்க்' பிரச்னையால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்த முடியாத நிலை உள்ளது,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us