/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்வாரிய அலுவலகத்தில் நெட் ஒர்க் பிரச்னை: பணம் செலுத்த முடியாமல் அவதி
/
மின்வாரிய அலுவலகத்தில் நெட் ஒர்க் பிரச்னை: பணம் செலுத்த முடியாமல் அவதி
மின்வாரிய அலுவலகத்தில் நெட் ஒர்க் பிரச்னை: பணம் செலுத்த முடியாமல் அவதி
மின்வாரிய அலுவலகத்தில் நெட் ஒர்க் பிரச்னை: பணம் செலுத்த முடியாமல் அவதி
ADDED : அக் 30, 2025 11:07 PM
வால்பாறை:  வால்பாறை மின்வாரிய அலுவலகத்தில் நெட் ஒர்க் பிரச்னையால், நுகர்வோர்கள் பணம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டனர்.
வால்பாறை நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், நாள் தோறும் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்துகின்றனர். இதற்காக தனி 'கவுன்டர்' திறக்கப்பட்டு, பணம் வசூலிக்கப்படுகிறது.
இதன் வாயிலாக, வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த மக்கள் நேரடியாக மின் கட்டணம் செலுத்தி ரசீது பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக நெட் ஒர்க் பிரச்னை காரணமாக, நுகர்வோர்களிடம் மின் கட்டணம் வசூலிக்காமல் திரும்பி அனுப்புகின்றனர். இதனால் மின் கட்டணம் உரிய நேரத்தில் செலுத்த முடியாமல், நுகர்வோர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
மின் கட்டணம் செலுத்துவதற்காக நாள் தோறும் அலுவலகம் வந்து ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. நெட் ஒர்க் பிரச்னையை காரணம் காட்டி, நுகர்வோர்களை அலைகழிக்கின்றனர். மின் கட்டணம் வசூலிக்க மாற்று ஏற்பாடு செய்யவில்லை. கால அவகாசத்துக்குள் மின் கட்டணம் செலுத்தாவிட்டால், மின் இணைப்பை துண்டித்து விடுவர். அதனால், மின்வாரிய அதிகாரிகள் இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மின்வாரிய அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் பழுதானதாலும், நெட் ஒர்க் பிரச்னையாலும் நுகர்வோர்களிடம் மின் கட்டணம் வசூலிக்க முடியவில்லை.
முடிந்த அளவுக்கு வாடிக்கையாளர்கள் தங்களது மின் கட்டணத்தை 'ஆன்லைன்' வாயிலாக செலுத்தலாம். பழுதடைந்த கம்ப்யூட்டர் மாற்றப்பட்டு நுகர்வோரிடம் மின் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

