தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வால்பாறையில் ‘நெட் ஒர்க்’ பிரச்னை: ரேஷன் கடைகளில் மக்கள் அவதி

வால்பாறையில் ‘நெட் ஒர்க்’ பிரச்னை: ரேஷன் கடைகளில் மக்கள் அவதி

வால்பாறையில் ‘நெட் ஒர்க்’ பிரச்னை: ரேஷன் கடைகளில் மக்கள் அவதி


UPDATED : நவ 08, 2026 06:33 PM

ADDED : நவ 08, 2026 06:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 06:33 PM ADDED : நவ 08, 2026 06:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: ‘நெட் ஒர்க்’ பிரச்னையால் ரேஷன் கடைகளில் ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தி பொருட்கள் பெற முடியாமல், வால்பாறையில் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.

மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், பெட்டிக்கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மக்கள் மொபைல்போன் வாயிலாக பணம் செலுத்தும் வசதியை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வால்பாறை நகரில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பணம் செலுத்த வசதியாக ‘பே டிஎம்’ கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால், வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் ‘நெட் ஒர்க்’ பிரச்னையால் ஆன்லைன் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்கள் பணம் செலுத்தி பொருட்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் கூறியதாவது:

ஆரம்ப காலத்தில் தொழிலாளர்களுக்கு மாதம் தோறும் நேரடியாக சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வங்கிக்கணக்கில் சம்பளம் வரவு செய்யப்படுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘ஆன்லைன்’ பண பரிவர்த்தனை மிகவும் எளிதாக உள்ளது. ஆனால், எஸ்டேட் பகுதியில் ‘நெட் ஒர்க்’ பிரச்னையால் ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தி பொருட்கள் பெற முடியாத நிலை உள்ளது.

இதைத்தவிர்க்க, வால்பாறையை சுற்றியுள்ள அனைத்து எஸ்டேட்களிலும் கூடுதலாக பி.எஸ்.என்.எல்., டவர்கள் அமைக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

சிவில் சப்ளை வருவாய் அலுவலர் பன்னீர்செல்வத்திடம் கேட்ட போது, ‘‘வால்பாறை தாலுகாவில் மொத்தம், 47 ரேஷன் கடைகள் உள்ளன. வால்பாறை நகரை தவிர, எஸ்டேட் பகுதிகளில் செயல்படும் கடைகளில் ‘நெட் ஒர்க்’ பிரச்னை உள்ளது.

‘‘அதனால், ஆன்லைன் வாயிலாக பணம் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. வால்பாறை நகரில் உள்ள மூன்று கடைகளில் மட்டும் ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தி ரேஷன் பொருட்கள் பெறும் வசதி உள்ளது,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us