UPDATED : அக் 07, 2026 04:45 PM
ADDED : அக் 07, 2026 04:24 PM
அ நிறம் | அளவு
கோவை: இந்திய பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (டெக்ஸ்புரோசில்) தொழில் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இதில் சங்கத்தின் புதிய தலைவராக தொழிலதிபர் ரவிசாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சைமா, சி.ஐ.ஐ. தொழில் அமைப்புகளின் தலைவராக இருந்துள்ளார். டெக்ஸ்புரோசில் துணை தலைவராகவும் இருந்துள்ளார். அமைப்பின் புதிய துணை தலைவராக தர்மேந்திர கோயல் தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் அடுத்த இரு ஆண்டுகள் இப்பொறுப்பில் இருப்பர்.
