தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு தேவை: கைகொடுக்குமா மாற்று வழிப்பாதை?

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு தேவை: கைகொடுக்குமா மாற்று வழிப்பாதை?

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு தேவை: கைகொடுக்குமா மாற்று வழிப்பாதை?


UPDATED : அக் 07, 2026 04:46 PM

ADDED : அக் 07, 2026 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 04:46 PM ADDED : அக் 07, 2026 04:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், கனரக வாகனங்கள் மாற்று வழிப்பாதையில் இயக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் காமராஜ்நகர் வரையிலும் சாலையோரங்களின் இருபுறமும் ஆக்கிரமிப்புக்கள் அதிகம் உள்ளன. இது தவிர, சுற்றுலா வாகனங்களும் சாலையோரம் நிறுத்தப்படுகிறது.

இந்நிலையில், இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை ஒரே ரோட்டில் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பொதுமக்கள் கூறியதாவது:

வால்பாறையில், ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதாலும், அனைத்து வாகனங்களும் செல்வதாலும் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சீசன் காலங்களில் சுற்றுலா பயணியர் வாகனங்கள் அதிகம் வருவதால் மேலும் நெரிசல் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க, பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை வரும் கனரக வாகனங்களை ரொட்டிக்கடை, பழைய வால்பாறை வழியாக மாற்றுவழியில் இயக்க வேண்டும். அதே போல் சோலையாறுடேம் பகுதியிலிருந்து வரும் கனரக வாகனங்களை பழைய வால்பாறை, ரொட்டிக்கடை வழியாக பொள்ளாச்சிக்கு இயக்க வேண்டும்.

வால்பாறை நகருக்குள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வளையல்கடை வீதி, ஸ்டேன்மோர் சந்திப்பு வழியாக பயணிக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரதீப் கூறியதாவது:

வால்பாறை மலைப்பாதையில், 40 கொண்டைஊசி வளைவுகள் உள்ளதால், கனரக வாகனங்கள் கவனமாக செல்ல வேண்டும். சோலையாறுடேம், கேரளா செல்லும் கனரக வானங்கள் ரொட்டிக்கடை பாறைமேடு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருமலை, அக்காமலை செல்லும் வாகனங்கள், 40வது கொண்டைஊசி வளைவு வழியாகவும், பிற வாகனங்கள் வால்பாறை நகரின் வழியாகவும் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, போலீசார் ஒருங்கிணைந்து ஆலோசித்து தான் முடிவு செய்ய முடியும்.

இவ்வாறு, கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us