ADDED : ஏப் 29, 2026 05:26 AM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: கோடை விடுமுறையை அடுத்து, பலரும் வீடுகளை பூட்டிவிட்டு சுற்றுலா, சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க, இரவு ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளி நபர்கள் குறித்தும் கண்காணிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களது பகுதிக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் யாரேனும் வந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
