/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய உதவி கமிஷனர் பொறுப்பேற்பு
/
புதிய உதவி கமிஷனர் பொறுப்பேற்பு
ADDED : செப் 30, 2024 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை :மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனர், கிழக்கு போக்குவரத்து உதவி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.
கோவை மாநகர ஆயுதப்படையில் உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் சேகர். இவர் கடந்த, 5 மாதமாக காலியாக இருந்த, மாநகர கிழக்கு போக்குவரத்து உதவி கமிஷனராக நேற்று காலை மாற்றப்பட்டார். நேற்று காலை, 10:30 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவர் ஏற்கனவே பணிபுரிந்து வந்த, மாநகர ஆயுதப்படைக்கு உதவி கமிஷனராக, சேலம் போலீஸ் பயிற்சி பள்ளியில் பணிபுரிந்து வந்த நாகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார். உதவி கமிஷனர் சேகர், கடந்த இரண்டு வருடங்களாக மாநகர ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.