/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுாலகங்களுக்கு வந்தாச்சு புதிய புத்தகங்கள்
/
நுாலகங்களுக்கு வந்தாச்சு புதிய புத்தகங்கள்
ADDED : அக் 30, 2025 11:27 PM
கோவை:  ''கோவையில் உள்ள நுாலகங்களுக்கு தேவையான புதிய நுால்கள் வந்து விட்டன. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து கிளை நுாலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்''என, கோவை மாவட்ட நுாலக ஆணைக்குழு அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில், முழு நேர நுாலகங்கள் மற்றும் பகுதி நேர நுாலகங்கள் என, 250 நுாலகங்கள் உள்ளன. இந்த நுாலகங்களுக்கு தேவையான நுால்கள் ஆண்டு தோறும் தமிழக பொது நுாலகத்துறையால், பதிப்பாளர்கள் மற்றும் பதிப்பகங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து நுாலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கோவையில் உள்ள நுாலகங்களுக்கு, 2021ம் ஆண்டுக்கு பிறகு புதிய நுால்கள் வாங்கப்படவில்லை. அதனால் கோவையில் உள்ள நுாலகங்ளில் பழைய நுால்கள் மட்டுமே உள்ளன. புதிய நுால்களை வாசிக்கும் ஆர்வத்துடன் நுாலகம் வரும் வாசகர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
இது குறித்து, கோவை மாவட்ட நுாலக ஆணைக்குழு அலுவலர் (பொறுப்பு) ராஜேந்திரன் கூறியாவது:
கோவை மாவட்ட மைய நுாலகத்துக்கு தேவையான நுால்கள் வேண்டி ஆன்லைனில் விண்ணப்பம் செய்யப்பட்ட நுால்கள் 90 சதவீத நுால்கள் வந்து விட்டன. இன்னும் 10 சதவீதம் நுால்கள் மட்டுமே வரவேண்டி உள்ளது. கிளை நுாலகங்களுக்கு புத்தகங்கள் பிரித்த அனுப்பும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் அனைத்து நுாலகங்களுக்கும்  அனுப்பி வைக்கப்படும்'' என்றார்.

