UPDATED : அக் 08, 2026 12:00 AM
ADDED : அக் 07, 2026 09:24 PM
அ நிறம் | அளவு
சூலுார்: அப்பநாயக்கன்பட்டியில், புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அப்பநாயக்கன்பட்டியில், நீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. குடிநீர், மாதத்துக்கு ஒரு முறையும், ஆழ்துளை கிணற்று நீர், 15 நாட்களுக்கு ஒரு முறையும் மட்டுமே வினியோகிப்பதால், மக்கள் அவதிக்குள்ளாகினர். குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக, ஆழ்துளை கிணற்று நீர் வினியோகம் அதிகரிக்க, இன்ஜின் தோட்டம் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நேற்று துவங்கியது. த.வெ.க., எம்.எல்.ஏ., சுகுமார், பணிகளை துவக்கி வைத்தார். இது பயன்பாட்டுக்கு வந்தால், வினியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும் என, மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
