UPDATED : அக் 07, 2026 10:01 PM
ADDED : அக் 07, 2026 09:14 PM

கோவை: வீட்டு சுவரில் கட்சி விளம்பரம் எழுத அனுமதி தராததால், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தன்னையும் குடும்பத்தினரையும் ஜாதி ரீதியாக அவதுாறாக பேசி மிரட்டுவதாக போலீஸ் கமிஷனர் பொறுப்பு வகிக்கும் ஐ.ஜி ரம்யா பாரதியிடம் பென்னாகரம் பிரகாஷ் என்பவர் புகார் அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
2010ல் எங்கள் வீட்டு சுவரில் கட்சி விளம்பரம் வரைய கூடாது என தடுத்தேன். அதிலிருந்து எனக்கு பிரச்னை ஏற்படுத்துகின்றனர். அ.தி.மு.க. செல்வகுமார், தி.மு.க. ராஜி ஆகியோர் ஜாதி ரீதியாக அவதுாறாக பேசி இடையூறு செய்கின்றனர்.
போலீசில் புகார் அளித்தேன். வன்கொடுமை தடுப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்தனர். யாரையும் கைது செய்யவில்லை. இதனால், மிரட்டுவதுடன் ஊர் பொது சாலையை பயன்படுத்த கூடாது என தடுக்கின்றனர். போலீசார் அவர்களுக்கு ஆதரவாக நடக்கின்றனர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
