/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய கட்டடம்; உயர்நீதிமன்ற நீதிபதி அடிக்கல் நாட்டினார்
/
புதிய கட்டடம்; உயர்நீதிமன்ற நீதிபதி அடிக்கல் நாட்டினார்
புதிய கட்டடம்; உயர்நீதிமன்ற நீதிபதி அடிக்கல் நாட்டினார்
புதிய கட்டடம்; உயர்நீதிமன்ற நீதிபதி அடிக்கல் நாட்டினார்
ADDED : பிப் 18, 2024 10:33 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில், உள்ள நீதிமன்ற வளாகத்தில், சார்பு நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் நவீன வசதிகளுடன் கூடுதலாக புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர் தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் ரூ.77 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சார்பு நீதிபதிக்கான குடியிருப்பை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீதிபதி சுந்தர், 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய வழக்கறிஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முரளி சங்கர், சதி குமார், குமரப்பன், மேட்டுப்பாளையம் வக்கீல்கள் சங்க தலைவர் ரஹ்மத்துல்லா, செயலாளர் கனகசுந்தரம், நீதிமன்ற சார்பு நீதிபதி கெங்கா ராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரகாஷ்,மாவட்ட உரிமையியல் நீதிபதி தமிழரசி, வக்கீல்கள் சங்க பொருளாளர் முகமது சபிக், ரூரல் எஸ்.பி.,பத்ரி நாராயணன் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி விஜயா, கோவை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் (பொறுப்பு) நம்பிராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

