/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை அரசு மருத்துவமனைகளில் ரூ.30 கோடியில் புதிய கட்டடங்கள்
/
கோவை அரசு மருத்துவமனைகளில் ரூ.30 கோடியில் புதிய கட்டடங்கள்
கோவை அரசு மருத்துவமனைகளில் ரூ.30 கோடியில் புதிய கட்டடங்கள்
கோவை அரசு மருத்துவமனைகளில் ரூ.30 கோடியில் புதிய கட்டடங்கள்
ADDED : ஜூன் 26, 2025 10:01 PM
கோவை; கோவை அரசு மருத்துவமனைகளில், பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. குறிப்பாக, அன்னுார், சூலுார், வேட்டைக்காரன் புதுார், மேட்டுப்பாளையம் மருத்துவமனைகளில் மட்டும், 30.15 கோடி ரூபாய் கட்டுமான பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை தவிர்த்து, கோவையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டில், 13 அரசு மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இதில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
கோவை அரசு மருத்துவமனைகளில், வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. அன்னுார் மருத்துவமனையில், 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் மற்றும் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பிணவறை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், தரைத்தளம் மற்றும் 5 மாடியுடன் பல்நோக்கு வசதிகளுடன் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்துவருகின்றன. அடித்தளம் போடப்பட்டுள்ளன.
சூலுார் அரசு மருத்துவமனையில், 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் புறநோயாளிகள் மற்றும் பிற வசதிகளுக்காக கட்டப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதுார் அரசு மருத்துவமனையில், ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் பணிகள் விரைவில் துவங்கவுள்ளன; ஒப்பந்தம் விடப்பட்டுள்ளன.
அன்னுார், சூலுார், வேட்டைக்காரன் புதுார், மேட்டுப்பாளையம் மருத்துவமனைகளில் மட்டும், 30.15 கோடி ரூபாய் கட்டுமான பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சுமதி கூறுகையில், ''பாதம் காப்போம் திட்டத்தில், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரத்யேக கிளினிக் துவக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதி அரசு மருத்துவமனைகளிலும், மக்களின் தேவைகள் பொருத்து தொடர்ந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன,'' என்றார்