தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புதிய பஸ் ஸ்டாண்ட் பணி; கலெக்டர் ஆய்வு

 புதிய பஸ் ஸ்டாண்ட் பணி; கலெக்டர் ஆய்வு

 புதிய பஸ் ஸ்டாண்ட் பணி; கலெக்டர் ஆய்வு


ADDED : ஜன 23, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 05:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், ஏழு கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளை, கோவை கலெக்டர் பவன் குமார் ஆய்வு செய்தார்.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில், புது மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டுகள் உள்ளன. அதில், புது பஸ் ஸ்டாண்டில் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களும், பழைய பஸ் ஸ்டாண்டில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட புறநகர்களுக்கு இயக்கப்படும் பஸ்களும் வந்து செல்கின்றன.

இந்நிலையில், புதிதாக மற்றொரு பஸ் ஸ்டாண்ட் அமைக்க அரசு, ஏழு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த, 2022ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.

பொள்ளாச்சி சி.டி.சி., மேட்டில், 3.25 ஏக்கரில், பஸ் ஸ்டாண்ட் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து, 2023 மே மாதம் பூமி பணிகள் துவங்கப்பட்டன.

பஸ்கள் நிறுத்த வசதிகள், கடைகள், இரண்டு தங்கும் விடுதிகள், பாதுகாப்பு அறை, தாய்மார்கள் பாலுாட்டும் அறை, போக்குவரத்து அலுவலகம், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நடக்கிறது. தற்போது, சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையப்படுகின்றன. இப்பணிகளை கோவை கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார். பணிகள் குறித்து கேட்டறிந்து, பஸ்கள் செல்ல, நிற்க ஏற்படுத்திய வசதிகள் குறித்து பார்வையிட்டார். ஆய்வின் போது, சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, நகராட்சி கமிஷனர் குமரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us