/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நொய்யலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க புதிய இயக்கம் துவக்கம்
/
நொய்யலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க புதிய இயக்கம் துவக்கம்
நொய்யலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க புதிய இயக்கம் துவக்கம்
நொய்யலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க புதிய இயக்கம் துவக்கம்
ADDED : ஆக 06, 2025 09:12 PM

கருமத்தம்பட்டி; நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலப்பதற்கு எதிராக, புதிய இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
நொய்யலுக்காக கைகோர்ப்போம்; தூய நீருக்காக குரல் எழுப்புவோம் என்ற கருத்தோடு, நொய்யல் குளக்கரையில் உள்ள செம்மாண்டாம்பாளையம் புதூர் கருப்பராயன் கோவிலில்,நொய்யல் ஆறு; நன்னீருக்கான இயக்கம் எனும் புதிய இயக்கம் துவக்கப்பட்டது.
இயக்கத்தினர் கூறியதாவது:
பல ஆண்டுகளுக்கு முன், விவசாயத்துக்கும், மக்கள் வாழ்வுக்கும் நொய்யல் நதி நீர், உயிர் நாடியாக இருந்தது. இன்று அந்த நீர் கழிவு நீரால் நஞ்சாகி விட்டது. விவசாயிகளும், விவசாயமும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன. கால்நடை வளர்ப்பு குறைந்து விட்டது.
மழை காலங்களில் மழை நீரை குளங்களுக்கு விடாமல், மீன் வளர்ப்பு என்ற பெயரில் குளங்களில் கழிவு நீரையே தேக்கி வைத்துள்ளனர்.
இதனால், குளங்களும் மாசடைந்து, விவசாயமும், பாசனமும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டது.
நொய்யலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க புதிய இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்.
மற்றும் மழைநீரை குளங்களில் தேக்க வேண்டும். குளங்களை பராமரிக்கும் பொறுப்பு, பாசன உழவர் குழுக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நொய்யல் ஆறு செல்லும் கிராமங்களில் நடத்த உள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், செயல் தலைவர் வெற்றி, மாவட்ட தலைவர் ஈஸ்வரன், ஏர்முனை இளைஞர் அணி சுரேஷ், தனபால், மயில்சாமி, நிசாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.