/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏழு எருமை பள்ளத்தில் புதிய தடுப்பணை; விவசாயிகள் மகிழ்ச்சி
/
ஏழு எருமை பள்ளத்தில் புதிய தடுப்பணை; விவசாயிகள் மகிழ்ச்சி
ஏழு எருமை பள்ளத்தில் புதிய தடுப்பணை; விவசாயிகள் மகிழ்ச்சி
ஏழு எருமை பள்ளத்தில் புதிய தடுப்பணை; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : செப் 02, 2025 08:51 PM

மேட்டுப்பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து, ஏழு எருமை பள்ளம் துவங்குகிறது. இப்பள்ளம் வீரபாண்டி, பிளிச்சி வழியாகவும், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்காரம்பாளையம், பெள்ளாதி, ஜடையம்பாளையம், பெள்ளேபாளையம் ஆகிய ஊராட்சிகள் வழியாகவும், சிறுமுகை பேரூராட்சி வழியாக பவானி ஆற்றுக்கு செல்கிறது.
மழை காலத்தில் இப்பள்ளத்தில் காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். தண்ணீரை தேக்கி வைக்க, பள்ளத்தில் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள கிணறுகளுக்கு நீர் ஊற்று கிடைத்து வருகிறது.
மழைக்காலத்தில் ஏழு எருமை பள்ளத்தில் வரும் தண்ணீரை தேக்கி வைத்து, அந்த தண்ணீரை குழாய் வழியாக, மூங்கில் குட்டைக்கு கொண்டு வர ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை அடுத்து ஏழு எருமை பள்ளத்தில், அரசு நிதி, 45 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவிலும், பொதுமக்கள் நிதியில் 55 லட்சம் ரூபாய் செலவிலும், மொத்தம் ஒரு கோடி ரூபாயில் ஏழு எருமை பள்ளத்தில், 140 அடி நீளம், 10 அடி உயரமுள்ள தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஏழு எருமை பள்ளத்தில் மழைக்காலத்தில் வரும் தண்ணீரை, தடுப்பணையில் தேக்கி வைக்கும் பொழுது, சுற்றுப்பகுதி விவசாய கிணறுகளுக்கு, நீரூற்று கிடைக்கும்.
மேலும் தடுப்பணையில் தேங்கி நிற்கும் தண்ணீரை, ஊற்றி நன்கு வளர்ந்து குழாய் வழியாக மூங்கில் குட்டைக்கு பம்பிங் செய்யும் பொழுது, அந்த குட்டையும் நிரம்பி வழியும். இதனால் பெள்ளாதி ஊராட்சி முழுவதும் உள்ள விவசாய கிணறுகளுக்கு தொடர்ந்து நீரூற்று கிடைக்கும். மழை காலம் தொடங்குவதற்கு முன், தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,' ஏழு எருமை பள்ளத்தில் புதிதாக கட்டியுள்ள தடுப்பணையில், தண்ணீர் தேங்கி நிற்கும் பொழுது, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள விவசாய கிணறுகளுக்கு நீரூற்று கிடைக்கும். இதனால் விவசாயிகள் எவ்வித சிரமம் இல்லாமல் விவசாயம் செய்வர்,' என்றனர்.