ADDED : அக் 29, 2024 05:30 AM

அ நிறம் | அளவு
சூலுார்: தீபாவளி பண்டிகையை ஒட்டி, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் தர்ம பிரசார் அமைப்பு சார்பில், ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
கலங்கல், வஞ்சிபுரம், தாளவாடி, அய்யம்பாளையம் பகுதிகளில் வசிக்கும், 350 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு புத்தாடைகளை, தர்ம பிரசார் அமைப்பின் மாநில அமைப்பாளர்கள் சுந்தரமூர்த்தி, தங்கவேல், மாவட்ட இணை செயலாளர் தியாகராஜன் ஆகியோர் வழங்கினர்.
ஒன்றிய அமைப்பாளர் விக்னேஷ், ஆதி, ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.
