/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மகளிர் கல்லுாரியில் வருகின்றன புதிய படிப்புகள்
/
அரசு மகளிர் கல்லுாரியில் வருகின்றன புதிய படிப்புகள்
அரசு மகளிர் கல்லுாரியில் வருகின்றன புதிய படிப்புகள்
அரசு மகளிர் கல்லுாரியில் வருகின்றன புதிய படிப்புகள்
ADDED : மார் 18, 2024 12:54 AM
கோவை;2020ம் ஆண்டு முதல், புலியகுளம் பகுதியில் மகளிர் அரசு கல்லுாரி செயல்படத்துவங்கியது. கல்லுாரி துவங்கும் போது, பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., வணிகவியல், பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல் படிப்புகள் மட்டும் துவக்கப்பட்டது. போதுமான வகுப்பறை வசதிகள் இல்லாமலே, கல்லுாரி துவங்கியது.
13.5 கோடி ரூபாய் செலவில், புதிய வகுப்பறை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், எதிர்வரும் கல்வியாண்டில், ஐந்து முதுநிலை, ஐந்து இளநிலை படிப்புகள் கூடுதலாக துவங்க, கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கல்லுாரி முதல்வர் வீரமணி கூறுகையில், ''எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், எம்.காம்., வணிகவியல், எம்.எஸ்சி., கணிதம், கணித அறிவியல் மற்றும் பி.எஸ்சி., இயற்பியல், வேதியியல், விலங்கியல், பொருளாதாரம், உளவியல் படிப்புகள் துவக்க, கருத்துரு சமர்ப்பித்துள்ளோம். புதிய கட்டடம் மே மாதம் பயன்பாட்டுக்கு வந்து விடும். ஆகையால், கூடுதல் பாடப்பிரிவுகள் துவங்குவதில் எவ்வித சிரமங்களும் இருக்காது,'' என்றார்.

