/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்களை பாதுகாக்க புதிய டி.ஐ.ஜி., உறுதி
/
பெண்களை பாதுகாக்க புதிய டி.ஐ.ஜி., உறுதி
ADDED : ஜன 02, 2025 07:30 AM

கோவை; கோவை டி.ஐ.ஜி.,யாக, சசி மோகன் நேற்று மாலை, பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டது. கோவை டி.ஐ.ஜி.,யாக இருந்த சரவண சுந்தர், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பதவி உயர்வு பெற்றார்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி.,யாக இருந்த சசி மோகன் பதவி உயர்வு பெற்று, கோவை டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று, ரேஸ்கோர்ஸில் உள்ள, அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
டி.ஐ.ஜி., சசி மோகன் கூறுகையில், ''கோவையில் பொருளாதார குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து, குற்ற தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். புறநகர் மற்றும் கோவை எல்லைப்பகுதிகளில் போதை பொருட்களை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும், '' என்றார்.
புதிதாக பொறுப்பேற்ற சசி மோகனுக்கு கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

