/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில் புது டிஜிட்டல் மையம் துவக்கம்
/
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில் புது டிஜிட்டல் மையம் துவக்கம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில் புது டிஜிட்டல் மையம் துவக்கம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில் புது டிஜிட்டல் மையம் துவக்கம்
ADDED : ஏப் 24, 2025 11:17 PM

கோவை; ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியில், புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கான சிறப்பு மையம் துவங்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்கு, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.
இம்மையம், சிங்கப்பூர் அலிபாபா கிளவுட், கோவை ஆல் ரியல் இன்னோவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சென்னை எக்ஸ்.டி.ஐ.சி., இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் கூட்டாண்மையில் நிறுவப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, மற்றும் வி.ஆர்., ஏ.ஆர்., எக்ஸ்.ஆர்., போன்ற நவீன தொழில்நுட்ப அறிவை மாணவர்களுக்கு வழங்கி, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது.
எக்ஸ்.டி.ஐ.சி., - ஐ.ஐ.டி.எம்., கல்வி ஒருங்கிணைப்பாளர் கணேஷ், கோவை ஆல் ரியல் இன்னோவேஷன்ஸ் நிறுவன இணை நிறுவனத்தின் நிவேதிதா, அலிபாபா கிளவுட் மூத்த பயிற்சி ஆலோசகர் பெர்டின் ஜோ ஜான் ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.