/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் புதிய டி.என்.ஏ., ஆய்வகம் ; இனி முக்கிய ஆய்வுகளில் உடனுக்குடன் 'ரிசல்ட்'

ADDED : ஏப் 17, 2025 07:08 AM

கோவை; ரேஸ்கோர்ஸ் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் அமைந்துள்ள, வட்டார தடய அறிவியல் ஆய்வகத்திற்கு, கோவை, திருப்பூர். ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்களை சேர்ந்த, குற்ற வழக்குகள் தொடர்பான தடயவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
டி.என்.ஏ., பரிசோதனைக்கான வசதிகள் இங்கு இல்லை என்பதால், போக்சோ வழக்குகள், சந்தேக மரணங்கள், சிக்கலான பிரேத பரிசோதனைக்கு, டி.என்.ஏ., மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, அதிக தாமதம் ஏற்படுவதால், பல வழக்குகளுக்கு விசாரணை மேற்கொள்வதில் இழுபறி நிலவுகிறது. அதனால், கோவையில் புதிய டி.என்.ஏ., ஆய்வகம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
தடயவியல் துறை பிரிவினர் கூறுகையில், 'புதிய ஆய்வக கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. இயந்திரங்கள், கெமிக்கல் கிட், பர்னிச்சர், பொருத்தும் பணிகள் உள்ளன. விரைவில் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்' என்றார்.
பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெயங்கொண்டான் கூறுகையில், ''கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் இப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஓரிரு வாரங்களில் கட்டடத்தை தடயவியல் துறைக்கு ஒப்படைத்துவிடுவோம்,'' என்றார்.