ADDED : பிப் 05, 2026 05:03 AM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: பேரூர் உட்கோட்டத்தில், டி.எஸ்.பி.,யாக சிவக்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், சிவக்குமார், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் உட்கோட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் உட்கோட்டத்தில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த சுரேஷ், பேரூர் உட்கோட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பேரூர் உட்கோட்ட டி.எஸ்.பி.,யாக சுரேஷ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
