/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒண்டிப்புதுாரில் வந்தாச்சு புதிய 'ஹோம் ஜோன்'
/
ஒண்டிப்புதுாரில் வந்தாச்சு புதிய 'ஹோம் ஜோன்'
ADDED : நவ 25, 2025 05:23 AM

கோவை: ஹோம் ஜோன், தனது புதிய ஷோரூமை ஒண்டிப்புதூர் பகுதியில் திறந்துள்ளது. புதிய ஷோரூமை, தமிழ்நாடு பார் கவுன்சில் துணைத் தலைவர் வழக்கறிஞர் அருணாச்சலம் திறந்து வைத்தார்.
15,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது, இந்த புதிய ஷோரூம். நவீன வடிவமைப்பு, விசாலமான நடைபாதை மற்றும் அனுபவத்தை மையப்படுத்திய, டிஸ்ப்ளே ஏற்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் சோபா, ரிக்ளைனர்,டைனிங் செட்கள், படுக்கைகள், ஸ்டோரேஜ் யூனிட், டெக்கோர் மற்றும் பல்வேறு பிரீமியம் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கோவையின் முன்னணி ரிக்ளைனர் அனுபவ மையமான ஸ்டுடியோ ரிக்ளைன், இங்குசெயல்பட உள்ளது.
புதிய ஷோரூமில் சிறந்த கலெக்சன் பெறுவதுடன், திறப்பு விழா சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெறலாம் என, ஹோம் ஜோன் இணை நிறுவனர் ரம்யா தெரிவித்தார்.
திறப்பு விழாவில் கட்டட உரிமையாளர் நவநீதன், திருப்பூர் அரசு கலைக்கல்லுாரியின் ஓய்வுபெற்ற முதல்வர் வேலுசாமி, வழக்கறிஞர் மோகன் குமார்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

