/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் வேலை வாய்ப்பு முகாம்; டிச. 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
/
தனியார் வேலை வாய்ப்பு முகாம்; டிச. 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தனியார் வேலை வாய்ப்பு முகாம்; டிச. 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தனியார் வேலை வாய்ப்பு முகாம்; டிச. 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : நவ 25, 2025 05:24 AM
கோவை: மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் 29ம் தேதி கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
கோவை, மேட்டுப்பாளை யம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து, உற்பத்தி துறை, ஜவுளித் துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி., துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத் துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உட்பட 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் பட்டதாரிகள் என, அனைத்து பிரிவினரும் முகாமில் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை; அனுமதி இலவசம்.
இந்நிலையில், நிர்வாக காரணங்களால், டிச.13ம் தேதிக்கு, இந்த வேலை வாய்ப்பு முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வேலை நாடும் மனுதாரர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் candidate login ல் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு, மனுதாரர்கள், 0422 2642388, 94990 55937 ஆகிய எண்ணில், காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை தொடர்பு கொள்ளவும்.
கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அதன் வாயிலாக, வேலை வாய்ப்பு முகாமுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, வேலை வாய்ப்பளிப்போர், 80563 58107 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

