/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புத்தாண்டில் புதுநம்பிக்கை; கனவு நனவாகுமா?
/
புத்தாண்டில் புதுநம்பிக்கை; கனவு நனவாகுமா?
ADDED : ஜன 01, 2025 05:47 AM

பொள்ளாச்சி :  இன்று புதிய ஆண்டு பிறக்கிறது. சோதனைகள் பல இருந்தாலும், 2024ம் ஆண்டு வறட்சி நீங்கி, மண்ணையும், விவசாயிகளின் மனதையும் குளிர்ச்சிபடுத்த மழை கைகொடுத்தது.
ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போது, இந்தாண்டாவது நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்புடன், புத்தாண்டை வரவேற்பது இயல்பாகி விட்டது.
பொள்ளாச்சியை மாவட்டமாக மாற்ற வேண்டும். தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். நெல்லுக்கு கட்டுபடியான விலை கிடைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
மேலும், ஒன்றியங்கள் பிரிக்க வேண்டும், குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யணும், அரசு மருத்துவமனையில் அனைத்து டாக்டர்களும் நியமித்து, சிகிச்சை முறையாக கிடைக்க வேண்டும் என்று மக்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்தாண்டும், பொள்ளாச்சியின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்புடன், புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கின்றனர் பொள்ளாச்சி மக்கள்.

