/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிறைவு பெற்றது புத்தொழில் மாநாடு; நிறுவனங்களில் ரூ.130 கோடி முதலீடு
/
நிறைவு பெற்றது புத்தொழில் மாநாடு; நிறுவனங்களில் ரூ.130 கோடி முதலீடு
நிறைவு பெற்றது புத்தொழில் மாநாடு; நிறுவனங்களில் ரூ.130 கோடி முதலீடு
நிறைவு பெற்றது புத்தொழில் மாநாடு; நிறுவனங்களில் ரூ.130 கோடி முதலீடு
ADDED : அக் 11, 2025 07:02 AM
கோவை: கோவையில் நடைபெற்ற உலக புத்தொழில் மாநாட்டில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களை புதிதாக துவக்க மற்றும் விரிவுபடுத்த ரூ.130 கோடி முதலீடு உறுதி செய்யப்பட்டதாக, ஸ்டார்ட்அப் தமிழ்நாடு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவை, கொடிசியா வளாகத்தில், ஸ்டார்ட்அப் தமிழ்நாடு சார்பில், 'உலக புத்தொழில் மாநாடு 2025' நேற்றும், நேற்று முன்தினமும் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று, மாநில திட்டக்குழு உறுப்பினர் ஜெயரஞ்சன் நிறைவுரையாற்றினார்.
ஸ்கேல்அப் கிராண்ட் திட்டத்தில், 22 தொடக்க நிலை தொழில் வளர் மையங்களுக்கு தலா ரூ.7.5 லட்சம், 15 தொழில் வளர் மையங்களுக்கு தலா ரூ.5 லட்சத்துக்கான ஒப்புதல் உத்தரவுகளை வழங்கினார்.
புத்தொழில் துணிகர முதலீடு மேம்பாடு திட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஒப்புதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.
மாநாட்டில், சர்வதேச உரையாளர்கள் 328 பேர் உட்பட 609 பேர் உரை நிகழ்த்தினர். 250க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
தொழில்முனைவோர் விளக்கிய ஐடியாவின் அடிப்படையில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ரூ.130 கோடி அளவுக்கு முதலீடு உறுதி செய்யப்பட்டது.
இது, வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என நம்புவதாக, ஸ்டார்ட்அப் தமிழ்நாடு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பங்கேற்பாளர்கள், தொழில்முனைவோர், கல்லுாரி மாணவர்கள் என இரு நாட்களில், 71,206 பேர் மாநாட்டில் பங்கேற்றனர்.