/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு துணை மருத்துவமனை திட்டம் என்னவானது? அதிகரிக்கிறது நோயாளிகள் கூட்டம்
/
அரசு துணை மருத்துவமனை திட்டம் என்னவானது? அதிகரிக்கிறது நோயாளிகள் கூட்டம்
அரசு துணை மருத்துவமனை திட்டம் என்னவானது? அதிகரிக்கிறது நோயாளிகள் கூட்டம்
அரசு துணை மருத்துவமனை திட்டம் என்னவானது? அதிகரிக்கிறது நோயாளிகள் கூட்டம்
ADDED : அக் 10, 2025 10:54 PM

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இட நெருக்கடி இருப்பதால், மருத்துவ கல்லுாரி வளாகத்தில், 1,000 படுக்கை வசதியுடன் துணை மருத்துவமனை அமைக்க, தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்ட முன்மொழிவு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனை, 18.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, மகப்பேறு, புற்றுநோய், எலும்பு முறிவு, மன நலம் உள்ளிட்ட 31 துறைகள் செயல்படுகின்றன.
உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளாக நாளொன்றுக்கு, 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு உதவியாக இருக்கும் உறவினர்கள் மற்றும் பணியாளர்கள் என, எப்போது பார்த்தாலும் கூட்டம் அதிகப்படியாக காணப்படுகிறது.
கிடப்பில் கருத்துரு
இம்மருத்துவமனையில்நுாறாண்டுகள் கடந்த பல கட்டடங்கள் சேதம் அடைந் திருக்கின்றன. சாலை உயர்ந்திருப்பதால், மருத்துவமனை கழிவுநீர், மழை நீர் வெளியேறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. தற்போது 9 கோடி ரூபாயில் சாலை மேம்பாடு, கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இட நெருக்கடி
தற்போது பிரதான சிக்கலாக உருவெடுத்துள்ளது. இதை சமாளிக்கவும், பிரதான அரசு மருத்துவமனை வளாகத்தை மேம்படுத்தும் நோக்கில், அவிநாசி ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில், 1,000 படுக்கை வசதிகளுடன் துணை மருத்துவமனை கட்ட மாவட்ட நிர்வாகம் தரப்பில், 2024ல் தமிழக அரசுக்கு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.
அதாவது, மருத்துவமனையில் புதிதாக துவக்கப்படும் பிரிவுகளுக்கான கட்டடங்களை, மருத்துவ கல்லுாரி வளாகத்தில் ஏற்படுத்தி, துணை மருத்துவமனையாக உருவாக்கலாம் என்கிற கருத்துரு அனுப்பப்பட்டது. கலெக்டர், மருத்துவமனை டீன் உள்ளிட்ட அதிகாரிகள் மாறி விட்டதால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
திட்டமிட்டால் இடவசதி கிடைக்கும்
சீனியர் டாக்டர் ஒருவர் கூறுகையில், 'அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், 1,000 படுக்கை வசதியுடன் மருத்துவமனை அமைத்தால், மருத்துவமனை வளாகத்தில் உள்ள, பல பழைய கட்டடங்களை இடித்து விட்டு, பார்க்கிங் வசதிகளுடன் விசாலமாக கூடுதல் துறைகள் உருவாக்கலாம்.
பல துறைகள் 'இன்டர் லிங்க்' ஆகி இருப்பதால் சிரமங்கள் உள்ளன. ஆக்கப்பூர்வமாக திட்டமிட்டு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால், இன்னும் பல ஆயிரம் பேருக்கு பயனுள்ளதாக அரசு மருத்துவமனை மாறும். இம்முன்மொழிவு அரசுக்கு சமர்ப்பித்து ஓராண்டாகி விட்டது. கண்டுகொள்ளாமல் உள்ளனர்' என்றார்.
டீன் கீதாஞ்சலியிடம் கேட்டபோது, ''அரசு மருத்துவமனையில், பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு பணிகள் நடக்கின்றன. மருத்துவக்கல்லுாரியில் 1000 படுக்கை வசதியுடன் துணை மருத்துவமனை முன்மொழிவு குறித்து தகவல் தெரியவில்லை; விசாரித்துச் சொல்கிறேன்,'' என்றார்.