/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.பி.ஐ., கோர்ட்டிற்கு புதிய நீதிபதி நியமனம்
/
சி.பி.ஐ., கோர்ட்டிற்கு புதிய நீதிபதி நியமனம்
ADDED : நவ 06, 2024 10:30 PM
கோவை ; கோவை, சி.பி.ஐ., கோர்ட்டிற்கு புதிய நீதிபதியாக ஜான்மினோ நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம், மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, திருப்பூர் மாவட்டம், உடுமலை நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜலிங்கம் உட்பட தமிழகம் முழுவதும், 12 நீதிபதிகளுக்கு, மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதே போல, தமிழகம் முழுவதும், 32 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஜான்மினோ, கோவை, சி.பி.ஐ., கோர்ட் நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே, கோவையில், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி, ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட் நீதிபதியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.