/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமலுக்கு வந்தது புதிய தொழிலாளர் நலச் சட்டம்: சைமா வரவேற்பு
/
அமலுக்கு வந்தது புதிய தொழிலாளர் நலச் சட்டம்: சைமா வரவேற்பு
அமலுக்கு வந்தது புதிய தொழிலாளர் நலச் சட்டம்: சைமா வரவேற்பு
அமலுக்கு வந்தது புதிய தொழிலாளர் நலச் சட்டம்: சைமா வரவேற்பு
ADDED : நவ 24, 2025 06:29 AM
கோவை: புதிய தொழிலாளர் நலச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசுக்கு சைமா நன்றி தெரிவித்துள்ளது.
தென்னிந்திய மில்கள் சங்க (சைமா) தலைவர் துரை பழனிசாமி அறிக்கை:
தொழிலாளர் நலச் சட்டங்களில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. 29 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு சட்டங்களாக எளிமைப்படுத்தியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக மாதிரி தொழிலாளர் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், தற்போது தான் அமலுக்கு வந்துள்ளது. உலகமயமாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்தியா இலக்குகளை அடைய இந்த சட்டம் மிக முக்கியமானது. ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தம் அமலுக்கு வந்த பின் நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள மிகப்பெரிய சீர்திருத்தம் புதிய தொழிலாளர் சட்டங்கள்.
உலக சந்தையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொழிலாளர் மற்றும் சமூகக் கோட்பாடுகளை அமல்படுத்தினால் மட்டுமே 2027க்கு பிறகு ஏற்றுமதி செய்ய முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளன. வரியில்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் சூழ்நிலையிலும் தொழிலாளர் சட்ட சீர் திருத்தம் இந்தியாவின் வணிகத்தை உலக சந்தையில் பெரிதும் உயர்த்தும்.
வேலை நேரங்களில் தளர்வு, பல்வேறு சட்டங்களை எளிமைப்படுத்துதல், வணிகம் செய்வதை எளிதாக்குதல், இந்தியா முழுவதும் ஒற்றை உரிம சான்றிதழ், ஒற்றை பதிவு, தொழிலாளர்களுக்கு கட்டாய சுகாதார பரிசோதனைகள், நியமன உத்தரவை கட்டாயமாக்குதல், பெண்களுக்கான வேலை வாய்ப்பு ஊக்குவித்தல், இரவு நேரங்களில் பெண்களில் பாதுகாப்பை மேம்படுத்துதல், வருடாந்திர பணிகளை சலுகைகள் போன்றவை புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு பயன் தரும். சலுகைகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் செலவு அதிகரித்தாலும், தொழிலாளர்களின் நலன் புதிய சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

