ADDED : செப் 06, 2026 04:22 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்க (காட்மா) பொதுக்குழு கூட்டம் நடந்தது.
செயற்குழுவின் மூன்றாண்டு பதவிக்காலம் முடிந்ததால் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் தலைவராக சிவக்குமார், பொதுச்செயலாளராக செல்வராஜ், பொருளாளராக பொன்னுசாமி, துணைத்தலைவர்களாக புவியரசு, சோமசுந்தரம், பாலன், சுதர்சன் தேர்வு செய்யப்பட்டனர். செயலர்களாக கோல்டன் பாலு, ஞானசேகரன், ராஜசுந்தர், மதிவாணன், கவுரவ ஆலோசகராக முத்துசாமி தேர்வு செய்யப்பட்டனர்.
