ADDED : மார் 05, 2026 04:58 AM
அ நிறம் | அளவு
சூலுார்: கண்ணம்பாளையம் பேரூராட்சியின் புதிய அலுவலகத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
நகர்புற வளர்ச்சித்துறை மற்றும் பேரூராட்சிகளின் இயக்குனரகம் சார்பில், ரூ.2.25 கோடி மதிப்பில், நவீன வசதிகளுடன் கண்ணம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது. புதிய அலுவலகத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ராஜகோபால், செயல் அலுவலர் சதீஷ்குமார், சூலுார் பேரூராட்சி தலைவர் தேவி, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் மன்னவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
