/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷனில் சரியான எடையில் பொருட்கள் வழங்க புதிய திட்டம்
/
ரேஷனில் சரியான எடையில் பொருட்கள் வழங்க புதிய திட்டம்
ரேஷனில் சரியான எடையில் பொருட்கள் வழங்க புதிய திட்டம்
ரேஷனில் சரியான எடையில் பொருட்கள் வழங்க புதிய திட்டம்
ADDED : மார் 18, 2025 05:38 AM
கோவை, : ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் எடை குறையாமல் வழங்க, புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
ரேஷன் கடைகளில் வாங்கும் உணவு பொருட்கள், எடைக்குறைவாக வழங்கப்படுகிறது என்ற புகார் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வழங்கல் தறை சார்பில், புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரேஷன் கடையில் எடைபோடும் எலக்ட்ரானிக் தராசை, பில் போடும் பிஓஎஸ் மெஷினுடன் 'புளூடூத்' மூலம் இணைத்து, பில் போடும் நடைமுறை, அடுத்த மாதம் 1ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் அமலுக்கு வர உள்ளது.
இப்படி செய்வதால், ஒரு கிராம் எடை குறைவாக இருந்தாலும், பில் போட முடியாது. இதன் மூலம் கார்டுதாரர்களுக்கு ரேஷனில் சரியான எடையில் பொருட்கள் கிடைக்கும். இந்த திட்டத்தில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக, ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
இதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஒரு கார்டுதாரருக்கு ஒரே பில்லில் எல்லா பொருட்களும் வழங்க முடியாது. ஒவ்வொரு எடைக்கும் ஒரு பில் போட வேண்டும்.
கார்டுதாரர்கள் ஒவ்வொரு பில்லுக்கும், தனித்தனியாக கைரேகை வைக்க வேண்டும். இதனால் கார்டுதாரர்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 25 கார்டுதாரர்களுக்கு மேல் பொருட்கள் வழங்க முடியாது.
இந்த திட்டத்தை அரசு அமல்படுத்தும் போது, குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை, சரியான எடையுடன் கடைகளுக்கு வழங்க வேண்டும்.
ரேஷன் கடைகளில் உள்ள தராசில், எடை போட்டு வழங்க வேண்டும். அனைத்து பொருட்களும் பொட்டலமாக வழங்கி விட்டால், சேதாரம் ஏற்படாது. இது போன்ற நடைமுறை சிக்கல்களை, அதிகாரிகள் சரி செய்வது அவசியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.