ADDED : செப் 28, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பாராளுமன்ற தொழில்துறை குழு உறுப்பினராக, கோவை எம்.பி., ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்;
பாராளுமன்றத்தில் உள்ள நிலைக்குழுக்களின் பதவி மிக முக்கியமானது.
மொத்தம், 24 துறைகளுக்கு நிலைக்குழுக்கள் உள்ளன. இக்குழுக்களில், 31 எம்.பி.,க்கள் உறுப்பினர்களாக இருப்பர். 21 பேரை லோக்சபா சபாநாயகரும், 10 பேரை ராஜ்யசபா தலைவரும் பரிந்துரைப்பர்.
இதில், தொழில்துறை சார்ந்த குழுவுக்கு தலைவராக, எம்.பி., திருச்சி சிவா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இக்குழு உறுப்பினர்களாக, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் மற்றும் கோவை எம்.பி., ராஜ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.