/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நெட் ஒர்க்' பிரச்னையால் புது சிக்கல்; ரேஷன் பொருள் வினியோகம் பாதிப்பு
/
'நெட் ஒர்க்' பிரச்னையால் புது சிக்கல்; ரேஷன் பொருள் வினியோகம் பாதிப்பு
'நெட் ஒர்க்' பிரச்னையால் புது சிக்கல்; ரேஷன் பொருள் வினியோகம் பாதிப்பு
'நெட் ஒர்க்' பிரச்னையால் புது சிக்கல்; ரேஷன் பொருள் வினியோகம் பாதிப்பு
ADDED : செப் 03, 2025 11:02 PM
வால்பாறை; 'நெட் ஒர்க்' பிரச்னையால் ரேஷன் கடைகளில் 'பாயின்ட் ஆப் சேல்' கருவி வாயிலாக பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வால்பாறை தாலுகாவில் மொத்தம், 15,250 ரேஷன் கார்டுளுக்கு, 42 ரேஷன் கடைகள் வாயிலாக மாதம் தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு நடைமுறைக்கு வந்த பின், பொருட்கள் வாங்க கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், வால்பாறை நகரில் செயல்படும், அமுதம் மற்றும் சிந்தாமணி ரேஷன் கடைகளில் 'பாயின்ட் ஆப் சேல்' கருவியின் டிஜிட்டல் தராசு வாயிலாக பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால், ரேஷன்கார்டுதாரர்களுக்கு உரிய ரேஷன் பொருட்களை சரியான எடை அளவில் வாங்கி செல்கின்றனர். ஆனால் எஸ்டேட் பகுதியில் 'நெட் ஒர்க்' பிரச்னையால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
சிவில் சப்ளை துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறை மலைப்பகுதியில் 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் டிஜிட்டல் தராசு வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் ரேஷன் கடைகளில் பொருட்கள் எடை குறைவது தடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கடைகளில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் தடுப்பதோடு, ரேஷன் பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுகிறது. வால்பாறை எஸ்டேட் பகுதியில் செயல்படும் ரேஷன் கடைகளில் 'நெட் ஒர்க்' பிரச்னையால், 'பாயின்ட் ஆப் சேல்' வாயிலாக ரேஷன் பொருட்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் எஸ்டேட் பகுதியில் உள்ள அனைத்து ரேஷன்கடைகளிலும், 'பாயின்ட் ஆப் சேல்' திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, கூறினர்.