/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எழுத்துபூர்வமாக கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கும் புதிய நடைமுறை அமல்
/
எழுத்துபூர்வமாக கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கும் புதிய நடைமுறை அமல்
எழுத்துபூர்வமாக கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கும் புதிய நடைமுறை அமல்
எழுத்துபூர்வமாக கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கும் புதிய நடைமுறை அமல்
ADDED : நவ 28, 2025 02:53 AM
கோவை: கைது செய்யப்படுவதற்கான காரணங்களை, எழுத்து பூர்வமாக கைதிகளிடம் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஒருவரை கைது செய்யும் போது, அதற்கான காரணத்தை அவருக்கு எழுத்து பூர்வமாக காண்பிக்க வேண்டும் என, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகர எல்லைக்குள் உள்ள, 20 போலீஸ் ஸ்டேஷன்களிலும், இந்நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய நடைமுறையை பின்பற்றாவிட்டால், அது சட்டவிரோத கைதாகி விடும்.
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இதற்கு முன், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு மட்டும், கைதுக்கான காரணம் குறித்து எழுத்துபூர்வமாக விளக்கம் வழங்கப்படும். தற்போது அனைத்து வழக்குகளுக்கும் இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது.
கைதிகளுக்கு புரியும் மொழியில், காரணம் எழுத்துபூர்வமாக வழங்கப்பட்டு, கையெழுத்து பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் கைதிகள், ஜாமின் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு எளிதில் நாட முடியும். ஜாமினில் விடக்கூடிய வழக்கு, அவர் மீது பதியப்பட்டுள்ளதா, ஜாமின் பெற உரிமை உள்ளதா உள்ளிட்ட விபரங்களை, கைதானவர்களிடம் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நடைமுறையால், யாரையும் சட்டவிரோதமாக கைது செய்ய முடியாது' என்றார்.

