/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருங்குடல் புற்றுநோயாளிகளுக்கு ஜெம் மருத்துவமனையில் புது திட்டம்
/
பெருங்குடல் புற்றுநோயாளிகளுக்கு ஜெம் மருத்துவமனையில் புது திட்டம்
பெருங்குடல் புற்றுநோயாளிகளுக்கு ஜெம் மருத்துவமனையில் புது திட்டம்
பெருங்குடல் புற்றுநோயாளிகளுக்கு ஜெம் மருத்துவமனையில் புது திட்டம்
ADDED : பிப் 05, 2025 12:55 AM

கோவை; பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான, பிரத்யேக ஆதரவு குழு மற்றும் சிறப்பு உதவி எண், கோவை ஜெம் மருத்துவமனை சார்பில், அறிமுகம் செய்யப்பட்டது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் அறிமுகம் செய்து வைத்தார்.
ஜெம் மருத்துவ மனையில் பெருங்குடல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று, வென்ற மக்களுடன் இணைந்து, இந்த ஆதரவுக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுபவர்களுக்கு, நம்பிக்கையான ஆதரவு மற்றும் சரியான தகவல்களை வழங்குவதே, இதன் குறிக்கோள்.
இந்த வகை புற்று நோயின் தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனை, சிகிச்சை மற்றும் உளவியல் ஆதரவு குறித்த வழிகாட்டுதல்கள், 99949 01000 என்ற சிறப்பு உதவி எண் மூலம் வழங்கப்படவுள்ளது.
ஜெம் மருத்துவ மனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு கூறுகையில், ''பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பில் பெரும்பாலும் வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமல் இருப்பதால், தாமதமாகவே சிகிச்சைக்கு வருகின்றனர். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், 'கொலோனோஸ்கோபி' பரிசோதனை மேற்கொள்வது முக்கியம்,'' என்றார்.
மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி பிரவீன் ராஜ், பெருங்குடல் அறுவை சிகிச்சைத் தலைவர் ராஜபாண்டியன், ரோபோடிக் பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஹரிஷ், டாக்டர்கள் சத்தியமூர்த்தி, சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.