/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய மக்கள் தொடர்பு அலுவலர் பதவியேற்பு
/
புதிய மக்கள் தொடர்பு அலுவலர் பதவியேற்பு
ADDED : பிப் 17, 2024 02:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:கோவை மாநகராட்சியின் புதிய மக்கள் தொடர்பு அலுவலர், நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கோவை மாநகராட்சியில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடம் காலியாக இருந்தது. இந்நிலையில், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இரண்டரை ஆண்டுகள் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்த பாலாஜி என்பவர் பதவி உயர்வு அடிப்படையில், கோவை மாநகராட்சிக்கு மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டார்.
இவர் நேற்று, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எட்டு ஆண்டுகள் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக, இவர் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.