/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலைக்கு புதிய பதிவாளர் நியமனம்
/
பாரதியார் பல்கலைக்கு புதிய பதிவாளர் நியமனம்
ADDED : ஆக 12, 2025 09:26 PM

கோவை, ;பாரதியார் பல்கலை பதிவாளராக, பெரியார் பல்கலையின் இயற்பியல் துறையை சேர்ந்த ராஜவேல் நியமிக்கப்பட்டார்.
பல்கலை பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களை நிரப்ப, கடந்தாண்டு ஆக., ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விண்ணப்பங்களை, பல்கலை நிர்வாகம் பரிசீலித்து கடந்த பிப்., மாதம், இப்பணியிடங்களை நிரப்ப, சிறப்புக்குழு(பேனல்) அமைத்தது.
நேர்முகத் தேர்வு சென்னையில் நடந்தது. பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த கல்வியாளர்கள் பங்கேற்றனர். உயர்கல்வித்துறை சார்பில் இதற்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
அதன்படி, பாரதியார் பல்கலையின் பதிவாளராக, பெரியார் பல்கலையின் இயற்பியல் துறை பேராசிரியர் ராஜவேல் நியமிக்கப்பட்டார்.
கோவை பிச்சனுாரில் உள்ள ஜே.சி.டி., கல்வி நிறுவனங்களின் தலைவர் துர்கா சங்கர், பாரதியார் பல்கலை துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.