ADDED : பிப் 19, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில், நர்சிங், பார்மசி ஆராய்ச்சிக்கான மையம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
மருத்துவக்கல்லுாரி துணை முதல்வர் டாக்டர் சுஜாதா கூறுகையில், ''ஆராய்ச்சி மையத்துக்கான கட்டடம், அறைகள் முன்பே இருப்பதால், உபகரணங்கள் கொள்முதலுக்காக, 30 லட்சம் ரூபாய் பல்கலை வழங்கியுள்ளது. விரைவில் ஆராய்ச்சி மையம் பயன்பாட்டுக்கு வரும். இம்மையத்தை கோவை மண்டல அளவில் அனைத்து நர்சிங், பார்மசி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்,'' என்றார்.
